முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6.5 சதவீதமாக தொடர்கிறது: : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      இந்தியா
Rbi 2024-12-06

Source: provided

புது டெல்லி: 11-வது முறையாக ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவிகிதமாக தொடரும் என  ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று அறிவித்தார்.

அதன்படி, ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால் வீட்டுக் கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ வட்டி விகிதம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 250 அடிப்படை புள்ளிகள் உயர்ந்ததால் 6.5 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி நீடிப்பது இது 11-வது முறையாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து