முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி எதிரொலி: பார்லி. வரும் 9-ம் தேதி ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      இந்தியா
Parlimanet 2024-06-30

புது டெல்லி, அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் வரும் 9-ம் தேதி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத்தில் சம்பாவில் சமீபத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விவாதிக்க அனுமதி மறுப்பதாக கூறி அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விடாமல் தடுப்பதாக குறிப்பிடும் வகையில் கருப்பு மாஸ்க் அணிந்தும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பேரணியில் ஈடுபட்டனர்.  

இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது எதிரிக்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

அதன்படி மாநிலங்களவை வரும் 9-ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார். அதை தொடர்ந்து மாநிலங்களவை வரும் 9-ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து