முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சி மீது அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      தமிழகம்
EPS 2023 03 27

அரியலூர், கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என முதல்வர் ஸ்டாலின் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார். இது கண்டனத்துக்குரியது என அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினர்.

அ.தி.மு.க. கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான, தாமரை எஸ்.ராஜேந்திரனின் மகள் பார்கவியின் திருமணம் நேற்று (டிச.6) அரியலூரில் நடைபெற்றது. முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக முதல்வர் ஸ்டாலின் 2024 மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றி பெற்றோம் என்று கூறி வருகிறார். ஆனால், அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க.வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று 100 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது.

கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார். இது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் அ.தி.மு.க.ஆட்சியின்போது அரியலூருக்கு மருத்துவக் கல்லூரி உட்பட 14 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையம், அனைத்து பகுதிகளிலும் மேம்பாலங்கள், சாலைகள் என பல்வேறு நலத்திட்டங்களை எனது தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தி உள்ளேன்.

விவசாயிகள் நலனில் அக்கறையோடு அ.தி.மு.க.ஆட்சி செயல்பட்டது. விவசாயிகளை மீட்டெடுத்த ஒரே இயக்கம் அ.தி.மு.க.மட்டும் தான். காவேரி வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவித்து விவசாயிகளை எப்போதும் அரவணைத்துக் கொள்ளும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும் தான். ஆனால் இதையெல்லாம் ஸ்டாலின் மறந்து பேசி வருகிறார்.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து