முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசம் இறுதிக்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      விளையாட்டு
Bangladesh 2024-09-02

Source: provided

8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு), இலங்கை , வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை - இந்தியா அணிகளும், மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளும் மோதின. இதில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், வங்காளதேச அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பர்ஹான் யூசுப் 32 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் இக்பால் ஹொசைன் எமன் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 117 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேசம் 22.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 120 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 8ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் வங்காளதேசம் - இந்தியா அணிகள் துபாயில் மோத உள்ளன.

_______________________________________________________________________________________

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நியனம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்து வந்த ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக கடந்த 1ம் தேதி பதவி ஏற்று கொண்டார். 2019-ம் ஆண்டு பி.சி.சி.ஐ செயலாளராக ஜெய்ஷா முதன் முதலாக பதவியேற்றார். அதன் பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த ஜெய்ஷா தற்போது ஐ.சி.சி தலைவராக பதவியேற்றுள்ளார் . முன்னதாக ஐ.சி.சி. தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்தார். 2020-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது 4 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. 

இதனையடுத்து, ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஷா ஐ.சி.சி தலைவராக பதவியேற்றதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவி காலியானது. இந்த பதவிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா இன்று பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

_______________________________________________________________________________________

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விலகல்

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருநாள் போட்டிகள் முறையே டிசம்பர் 8, 10, 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாகவும், பிரண்டன் கிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரர்களான மேத்யூ போர்டே மற்றும் ஷமர் ஜோசப் ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அவர்கள் இருவரும் வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட மாட்டார்கள் எனவும், அவர்களுக்கு பதிலாக மார்க்வினோ மைண்ட்லி, ஜெடியா பிளேட்ஸ் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து