எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். மேலும் பல்வேறு முடிவுற்ற பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதன் விவரம் வருமாறு., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 42.70 கோடி ரூபாய் செலவில் தனியார் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கான நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிறுத்துமிடத்தில் உணவகங்கள், தங்குமிடங்கள், ஒப்பனை அறைகள் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன், ஒரே நேரத்தில் 150 பேருந்துகள் நிறுத்துகின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார், இந்த ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகில் சுமார் 16 ஏக்கர் நிலப்பரப்பில் 15 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு காலநிலைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இந்த பூங்காவை திறந்து வைத்தார். இப்பூங்காவில் தொல்லியியல் விளக்க மையம், அகழிகள், மழைநீர் குளங்கள், உயர்மட்ட நடைபாதை, மரத்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா, சிலைகள் பூங்கா விளையாட்டு மைதானம், திறந்தவெளி அரங்கம் மற்றும் கண்காட்சி மேடைகள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இந்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
இம்மையத்தில் மருத்துவர்கள் ஆலோசனை அறை, செவிலியர்களுக்கு தனி அறை, 3 மருத்துவ படுக்கை வசதிகளை உள்ளடக்கிய அவசர சிகிச்சைப் பிரிவு, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருந்தகம், 50 நபர்கள் ஒரே நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் காத்திருப்புக் கூடம், ஒப்பனை அறைகள், மருத்துவ அவசர ஊர்திகள் நிறுத்துமிடம், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ சிகிச்சை மையத்தின் மூலம் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்திற்கு தினந்தோறும் வருகை தரும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர்.
இம்மருத்துவ சிகிச்சை மையத்தை தகுந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்டு திறம்பட செயல்படுத்திட அப்போலோ மருத்துவ குழுமம் முன்வந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரித்தா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
கிறிஸ்துமஸ் விடுமுறை: ஏற்காட்டில் அலை மோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
25 Dec 2024கிறிஸ்துமஸ் விடுமுறை: ஏற்காட்டில் அலை மோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
-
டிஜிட்டல் கைது என்ற நடைமுறை இல்லை: பெங்களூரு போலீஸ் கமிஷனர் தகவல்
25 Dec 2024பெங்களூரு, நமது சட்டமும், அரசியலமைப்பிலும், 'டிஜிட்டல்' கைது என்ற நடைமுறை எதுவும் இல்லை.
-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகாரில் ஒருவர் கைது - விசாரணை: மாணவர்கள் திடீர் போராட்டம்
25 Dec 2024சென்னை, மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா:வேற்றுமையை கிள்ளி எறிய வள்ளுவரே மருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Dec 2024சென்னை, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் வேற்றுமையை கிள்ளி
-
2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார்
25 Dec 2024சென்னை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (27-ம் தேதி) சென்னை வர உள்ளார். தமிழக பா.ஜ.க.
-
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை திடீர் ஒத்திவைப்பு
25 Dec 2024சென்னை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
ஊழல் புகார் எதிரொலி: செபி தலைவர் மாதபி பூரி நேரில் ஆஜராக லோக்பால் நோட்டீஸ்
25 Dec 2024புதுடெல்லி, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் புகார் தாரரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.
-
தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
25 Dec 2024சென்னை, தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு
25 Dec 2024வாஷிங்டன், விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் குழு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளது.
-
மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர்: வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
25 Dec 2024சென்னை, மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர் என்று வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை
25 Dec 2024சென்னை, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை இலங்கை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சாதிவாரி, மக்கள் கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை கேட்பாரா அன்புமணி? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி
25 Dec 2024சென்னை, சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மோடி அரசைக் கேட்கும் தைரியம் அன்புமணிக்கு இருக்கிறதா? என அமைச்சர் எஸ்.எஸ்.
-
மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்
25 Dec 2024சென்னை, மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கிய சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
37 மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைப்பு: ஜோபைடன் நடவடிக்கைக்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு
25 Dec 2024அமெரிக்கா, அமெரிக்காவில் 37 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்த அதிபர் ஜோ பைடனை, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உறுதி
25 Dec 2024சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
-
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: ஆப்கானில் 46 பேர் பலி
25 Dec 2024காபுல், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.
-
கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்தார் அமெரிக்க பாடகி
25 Dec 2024வாஷிங்டன், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி நன்றி தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை வெளியீடு: ஜஸ்ப்ரிட் பும்ரா முதலிடம்
25 Dec 2024துபாய்: ஐசிசி தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்ப்ரிட் பும்ரா. மேலும் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
கஜகஸ்தானில் பயங்கரம்: பயணிகள் விமானம் வெடித்து சிதறியதில் 42 கருகி உயிரிழப்பு: 30 பேர் படுகாயம்
25 Dec 2024அக்டாவ், கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியதில் 42 கருகி உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
-
பல்கலை. மாணவி விவகாரம்: அதிர்ச்சியளிப்பதாக விஜய் பதிவு
25 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ரஷித் விளையாட மாட்டார்?
25 Dec 2024ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
25 Dec 2024சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்து காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்கும் என்று தெரிவித்துள் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான
-
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜன. 3-ல் வைகோ தலைமையில் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
25 Dec 2024சென்னை, டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன.
-
அமைதி, செழிப்புக்கான பாதை உண்டாகட்டும்: பிரதமர் மோடி, இ.பி.எஸ். விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2024புதுடில்லி, 'இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை உண்டாக்கட்டும்' என பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்