முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம் உருவானது : வரும் 12-ம் தேதி தமிழகத்தை நோக்கி வரும் என கணிப்பு

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2024      தமிழகம்
India-Meteorological 2022

சென்னை, தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவ.29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலை, ரெயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றநிலையில், தற்போது அங்கு நிலைமை ஓரளவு சீராகி உள்ளது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 12-ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு இலங்கை கடலோர பகுதிகளை அடையக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடயே ஃபெஞ்சல் புயலின் பாதையிலேயே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கி வரும் என்பதால் கடற்கரை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து