முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராவிஸ் ஹெட் உலக சாதனை

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2024      விளையாட்டு
Australia 2023-12-17

Source: provided

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 6 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அபாரமாக விளையாடி 111 பந்துகளில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் 121 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதன் மூலம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களிலுமே டிராவிஸ் ஹெட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________________________

அயர்லாந்து அணி வெற்றி

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வங்காளதேசம் வென்றது. தொடர்ந்து நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று 1-0 என வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக லாரா டெலானி 35 ரன் எடுத்தார்.

வங்காளதேசம் தரப்பில் நஹிதா அக்டர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக திலாரா அக்டர் மற்றும் சோபனா மோஸ்தரி ஆகியோர் களம் இறங்கினர். இதில் சோபனா மோஸ்தரி 1 ரன்னிலும், திலாரா அக்டர் 10 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து நிகர் சுல்தானா 6 ரன், தாஜ் நெஹர் 2 ரன், ஷோர்னா அக்டர் 20 ரன், ஷர்மின் அக்தர் 38 ரன், பஹிமா காதுன் 5 ரன், ஜஹானாரா ஆலம் 1 ரன், ஜன்னதுல் பெர்டஸ் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் வங்காளதேச அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 87 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் அயர்லாந்து அணி 47 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

____________________________________________________________________________________________________

ஷமி அணிக்கு திரும்ப வலியுறுத்தல்

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா மீதான அழுத்தம் குறைய, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி விரைவில் ஆஸ்திரேலியா வரவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் வேகப் பந்துவிச்சாளர் முகமது ஷமி சீக்கிரம் ஆஸ்திரேலியாவுக்கு வருவது இந்திய அணிக்கு சிறப்பானதாக இருக்கும். அவர் அதிக அளவிலான உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசும் போதும், மற்ற பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போதும் எதிரணியின் மீதான அழுத்தத்தை உங்களால் பார்க்க முடியும்.

அதிகப்படியான அழுத்தம் ஜஸ்பிரித் பும்ராவின் மீது உள்ளது. முகமது ஷமி இந்திய அணியுடன் விரைவில் இணைய வேண்டும். பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஷமியை விளையாட வைப்பது மிகவும் சீக்கிரமாக விளையாட வைக்கும் முடிவாக இருக்கலாம். ஆனால், மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்ட் போட்டிகளில் முகமது ஷமி கண்டிப்பாக விளையாடலாம் என்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 44 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து