முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எது உண்மையான சக்தி என்று உலகுக்கு இந்தியா காட்டுகிறது பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2024      இந்தியா
Modi 2024-12-09

Source: provided

ராஜஸ்தான்: உண்மையான சக்தியை இந்தியா உலகுக்கு காட்டுகிறது என்று ரைசிங் ராஜஸ்தான் உலகளாவிய முதலீட்டு மாநாட்டை ராஜஸ்தானில் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாளை (11-ம் தேதி) வரை நடக்கும் இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மோடி,  தொழில்நுட்பம் மற்றும் தரவு  சார்ந்த நூற்றாண்டு இது. ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் தரவு ஆகியவற்றின் உண்மையான சக்தியை இந்தியா உலகுக்கு காட்டுகிறது. இன்று உலகின் ஒவ்வொரு நிபுணரும், ஒவ்வொரு முதலீட்டாளரும் இந்தியாவை பற்றி மிகவும் ஆர்வத்தடன் உள்ளனர்.

எங்கள் அரசு வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் மந்திரத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ராஜஸ்தான் பலன் அடைந்துள்ளது. இந்தியாவின் யு.பி.ஐ. டி.பி.டி, திட்டம் மற்றும் இது போன்ற பல பல தரவுகள் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் வலிமையை காட்டுகின்றன. இந்தியா 11-வது பெரிய பொருளாதாரமாக மாற 7 தசாப்தங்களானது. அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அரியானாவில் உள்ள பானிபட் நகருக்கு சென்ற மோடி.  அங்கு அவர் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி.) மூலம் பீமா சகி யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி முதல் கட்டமாக 35,000 பெண்களும், அடுத்த கட்டமாக 50,000 பெண் களும் எல்.ஐ.சி. முகவா்களாக தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து