முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை எதிரொலி: தி.மு.க. செயற்குழுக்கூட்டம் ஒத்திவைப்பு

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2024      தமிழகம்      அரசியல்
DMK-Offces 2023 03 31

சென்னை, கனமழை எதிரொலி காரணமாக தி.மு.க. செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கனமழை எச்சரிக்கை மற்றும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்றத் கூட்டத் தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டி இருப்பதாலும், வருகிற 18-ந் தேதி நடைபெறவிருந்த தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பாராளுமன்றத் கூட்டத் தொடரில் தி.முக.. உறுப்பினர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், 18-ம் தேதியன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தி.முக. தலைமைச் செயற்குழுக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. தி.முக. தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, சென்னையில் வருகிற 18-ம் தேதி, தி.முக.. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து