முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத்த ருசி கண்ட காங்கிரஸ்: மோடியின் பேச்சால் எங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது - பிரியங்கா காந்தி பரபரப்பு பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024      இந்தியா
Priyanka 2024-10-23

Source: provided

டெல்லி : பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 26-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 20-ந் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில்  மக்களவையில் அரசியலமைப்பு மீதான சிறப்புரைகள் இடம்பெற்றன.

அரசியலமைப்பை ஏற்று 75 வருடம் ஆகியுள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் இந்த உரைகள் இடம்பெற்றன. இதில் கடைசியாகப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

நேரு தொடங்கி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என வரிசையாக மோடி தனது உரையில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ரத்த ருசி கண்ட காங்கிரஸ் அரசியலமைப்பை மீண்டும் மீண்டும் காயப்படுத்தியுள்ளது என்று அவர் தெரிந்தார்.

இந்நிலையில் கூட்டம் முடிந்து வெளியே வந்த வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, மக்களவையில் மோடி ஆற்றிய 110 நிமிட உரையை பள்ளியின் இரண்டு கணித வகுப்புகளில் தொடர்ந்து இருப்பதுபோன்று சலிப்பூட்டுவதாக இருந்தது என தெரிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பிரதமர் புதியதாக ஒன்றும் பேசவில்லை, அவர் எங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினார். இது என்னை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி எடுத்துச் சென்றது. நான் அந்தக்காலத்தில் பள்ளியில் இரண்டு கணித வகுப்புகளில் அமர்ந்திருப்பதைப் போல உணர்ந்தேன்.

நட்டா ஜியும் கையைத் தடவிக் கொண்டிருந்தார். ஆனால் மோடி ஜி அவரைப் பார்த்தவுடன் அவர் கவனமாகக் கேட்பது போல் பாவனை செய்யத் தொடங்கினார்.

அமித்ஷாவும் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார். பியூஷ் கோயல்ஜி தூங்கியே விட்டார். இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பிரதமர் புதிதாக ஏதாவது சொல்வார் என்று நான் நினைத்தேன் என்று பிரியங்கா தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து