முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமைக்காவுக்கு இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருள்கள்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024      இந்தியா
Jamaica 2024-12-15

Source: provided

புதுதில்லி : ஜமைக்காவுக்கு இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

கரீபியன் கடல்பகுதியிலுள்ள தீவு நாடான ஜமைக்காவிற்கு இந்தியா சார்பில் சுமார் 60 டன் அளவிலான மருத்துவ மற்றும் பேரிடர் கால நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஜமைக்காவின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யவும் பேரிடர் காலங்களில் உதவுவதற்காகவும் மனிதநேய அடிப்படையில் இந்தியா சார்பில் இந்த பொருள்கள் அனுப்பப்படுகின்றன.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடந்த சனிக்கிழமை அவரது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கூறியதாவது,

ஜமைக்கா நாட்டின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யவும், அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மேலும் சூறாவளி போன்ற பேரிடர் காலங்களில் உதவுவதற்காகவும்; அவசரக் கால மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட 60 டன் அளவிலான நிவாரணப் பொருள்கள் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா சார்பில் அந்நாட்டிற்கு அனுப்பபடுகின்றன என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜமைக்கா நாட்டு பிரதமர் ஆண்டிரியூ ஹோல்னஸ் இந்தியாவிற்கு முதல்முறையாக கடந்த செப். 30 முதல் அக். 3 வரை வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து