முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024      இந்தியா
Maharashtra

Source: provided

மும்பை: மகாராஷ்டிரத்தில் மகாயுதி கூட்டணியின் அமைச்சர்கள் நேற்று (டிச. 15) பொறுப்பேற்றுக்கொண்டனர். மகாராஷ்டிரத்தில் மகாயுதி கூட்டணியின் அமைச்சரவை விரிவாக்கம் நேற்று (டிச. 15) நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

நாக்பூரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், சிவசேனைக் கட்சியின் (ஷிண்டே பிரிவு) ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (அஜீத் பிரிவு) தலைவர் அஜீத் பவார் உள்ளிட்ட மகாயுதி கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் பங்கேற்றார்.

இதில், மகாயுதி கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர்கள் சஞ்சய் ரத்தோட், உதய் சமந்த், ஜெயக்குமார் ராவல், சந்திரகாந்த் பாட்டீல், அசோக் உய்க், ராதாகிருஷ்ணா விகே பாட்டீல், குலாப்ராவ் பாட்டீல், கணேஷ் ராமச்சந்திர நாயக் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். மேலும், அதுல் சவே, தாதாஜி புசே, பவன்குலே, பங்கஜா முண்டே, தனஞ்செய் முண்டே, மங்கல் பிரபாத் லோதா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

மகாயுதி கூட்டணி சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 19 அமைச்சரவையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு 11, ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு 9 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 5ஆம் தேதி மகாராஷ்டிரத்தின் முதல்வராஜ தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்ற நிலையில், 10 நாள்கள் கழித்து அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து