முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமியை நோக்கி வரும் 2 கோள்கள் : நாசா எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024      உலகம்
NASA 2024-12-15

Source: provided

அமெரிக்கா : பூமியை நோக்கி இரண்டு பெரிய ஆஸ்டிராய்டு எனப்படும் சிறுகோள்கள் வந்துகொண்டிருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இரண்டு பெரிய சிறுகோள்கள் பூமியை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருப்பதாகவும் அவை நாளை அதிகாலை பூமியை கடந்து செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. இவை இரண்டினாலும் பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்றும் அதனைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆஸ்டிராய்டுகளில் மிகப்பெரியதிற்கு ’ஆஸ்டிராய்டு 2024 எஸ்.ஒய் 5 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் அது 71 அடி சுற்றளவில் சிறிய ரக விமானத்தின் அளவில் இருக்கக்கூடும் எனவும் ஒரு மணி நேரத்திற்கு 17,389 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் அது இந்திய மணிக்கணக்கில் நாளை காலை 5.56 மணியளவில், பூமியிலிருந்து சுமார் 3,500,000 கி.மீ. தொலைவில் அது கடந்து செல்லக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோளுக்கும் பூமிக்குமான தொலைவானது நிலவுக்கும் பூமிக்குமான தொலைவை விட 9 மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து