முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் : வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      தமிழகம்
Thirumavalavan 2023 07 30

Source: provided

கடலூர் : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 12-ந்தேதி பெய்த கனமழை காரணமாக வீராணம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. விளைநிலங்களும் தண்ணரீல் மூழ்கி வீணாகின. இருப்பினும் தமிழக அரசால் வழங்கப்பட வேண்டிய நிவாரணம் இப்பகுதி மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளாற்றில் 10 ஆயிரம் கனஅடி வெளியேற்றுவதற்கு ஏதுவாக அங்கு 5 இடங்களில் வடிநில பாதை அமைக்க வேண்டும். வெள்ளியங்கால் ஓடையை ஆழப்படுத்தி கரைகளை உயர்த்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கொத்தட்டையில் திடீரென உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தி.மு.க. கூட்டணி கட்சிகளை நல்லிணக்கமாக கையாள்கிறது. கோரிக்கைகள் நிறைவேறாமல் இருக்கலாம். அரசியல் ரீதியாக சில முரண்பாடுகள் எழலாம். அது எந்த கட்சியோடு கூட்டணி வைத்திருந்தாலும் இருக்கக்கூடிய ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 18 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 18 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 16 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 16 hours ago
View all comments

வாசகர் கருத்து