முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: வங்கதேச, நியூசி. அணிகள் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      விளையாட்டு
Bangladesh 2024-09-02

Source: provided

டாக்கா : சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச,  நியூசிலாந்து அணிகள்  அறிவிக்கப்பட்டுள்ளன.  

2 பிரிவாக...

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான்  நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இந்திய அணியை...

சர்வதேச மற்றும் உள்ளூர்ப் போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப்-அல்-ஹசன் மற்றும் முன்னணி ஆட்டக்காரர் லிட்டன் தாஸும் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இங்கிலாந்தில் நடந்த பந்துவீச்சு சோதனையில் தோல்வியைத் தழுவிய ஷகிப்-அல்-ஹசன், சமீபத்தில் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா விளையாட்டு அறிவியல் மையத்தில் நடந்த சோதனையிலும் தோல்வியைத் தழுவினார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற 37 வயதான ஷகிப்-அல்-ஹசனின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.துபாயில் பிப்ரவரி 20 -ம் தேதி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் தங்களது முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது வங்கதேச அணி. 

வங்கதேச அணி:

நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தவ்ஹித் ஹ்ரிடோய், சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன், மஹ்முதுல்லா, ஜேக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத், பர்வேஸ் ஹொசைன், நசும் அகமது, தன்சிம் ஹாசன், நஹித் ராணா.

ஓ ரூர்க் - ஸ்மித்...

இதே போல், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்த நியூசிலாந்து அணிக்கு மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சாளர்களான லாக்கி பெர்க்யூசன் மற்றும் பென் சியர்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். வில்லியம் ஓ ரூர்க் மற்றும் நாதன் ஸ்மித் இருவரும் முதல் ஐசிசி தொடரில் விளையாடவுள்ளனர். இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட ஜேக்கோப் டஃபி ரிசர்வ் வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி:

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, லாக்கி  பெர்க்யூசன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில்லியம் ஓ’ரூர்க், கிளன் பிளிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சியர்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் வில் யங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து