முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2025 -18-வது ஐ.பி.எல். சீசன் மார்ச் 23-ம் தேதி தொடக்கம் : பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : 2025 -18-வது ஐ.பி.எல். சீசன் மார்ச் 23-ம் தேதி தொடங்கவுள்ளதாக பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

உள்ளூர் டி20 தொடர்...

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

மார்ச் 23-ம் தேதி...

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் தொடங்கும் தேதியை பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா நேற்று அறிவித்தார். மும்பையில் நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். அதன்படி இந்த வருடம் (2025) மார்ச் 23-ம் தேதி 18-வது ஐ.பி.எல். சீசன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து