எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கி, அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (13.1.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.
கலைஞர் கருணாநிதியின் 97-ம் பிறந்த நாளை முன்னிட்டு 3.6.2021 அன்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட கனவு இல்லம் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விருதாளர்களுக்கு அரசு மூலமாக ரூ.40,00,000/- மதிப்பீட்டில் கனவு இல்லம் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டது.
அதன்படி, 1994-ம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட விஷக்கன்னி எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆ. செல்வராசு (எ) குறிஞ்சிவேலனுக்கு தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2பி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2004-ம் ஆண்டு கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பருவம் எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற ப. பாஸ்கரன் (எ) பாவண்ணனுக்கு தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 3பி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல் எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற சா. மணி (எ) நிர்மாலயாவுக்கு கோயம்புத்தூர், சிங்காநல்லூரில் இரண்டாவது அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் முதல் தளத்தில் 4-ஆம் எண் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு ஒடியாவிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம் எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற பி.க.இராஜேந்திரன் (எ) இந்திரனுக்கு சோழிங்கநல்லூர் 1500 திட்டப்பகுதி – II, எட்டாவது தளத்தில் உள்ள மத்திய வருவாய் பிரிவு – II எண்.1/47 குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மீட்சிஎனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கௌரி கிருபானந்தனுக்கு சோழிங்கநல்லூர் 1500 திட்டப்பகுதி, பிளாக் எண்-11, எண் 32 குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பொறுப்புமிக்க மனிதர்கள் எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற க. பூரணச்சந்திரனுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சென்னை, பெசன்ட்நகர் கோட்டம்/பிரிவு – 2, சோழிங்கநல்லூர் (1500 எம்.எஸ்.பி) இரண்டாவது தளம், பிளாக் எண் 7, அடுக்குமாடி குடியிருப்பில் எண். 11 குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கசாக்கின் இதிகாசம் எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற தி. மாரிமுத்து (எ) யூமா வாசுகிக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ‘4சி’ குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட திருடன் மணியன்பிள்ளை எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற சா. முகம்மது யூசுப் (குளச்சல் யூசப்) -க்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சென்னை, பெசன்ட்நகர் சோழிங்கநல்லூர் (1500 எம்.எஸ்.பி) கோட்டம்/பிரிவு – 1, இரண்டாவது தளம், அடுக்குமாடி குடியிருப்பில் எண். 6/10 குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நிலம் பூத்து மலர்ந்த நாள் எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கே.வி. ஜெயஸ்ரீக்கு ஜெ.ஜெ. நகர் கோட்டம், 92-எச்.ஐ.ஜி. அம்பத்தூர் கட்டடத்தின் எச்.4/90 என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கருங்குன்றம் எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கண்ணையன் தட்சணமூர்த்திக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ‘4ஏ’ குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பிடும் வகையில் அவரது அனைத்து படைப்புகளையும் இன்றைய தமிழ் இளைஞர்கள் எளிமையாக வாசிக்கும் வகையில் புலவர் செந்தலை ந. கவுதமன், பேராசிரியர் வீ. அரசு, பேராசிரியர் முனைவர் மு. வளர்மதி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் மேனாள் துணை இயக்குநர் அ. மதிவாணன் ஆகியோரின் நெறியாளுகையில் பிறமொழி கலப்பின்றி மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ் வளர்ச்சித் துறை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து மக்கள் பதிப்பாக (1) இந்தியாவில் சாதிகள், (2) சூத்திரர்கள் யார்? பகுதி 1, (3) சூத்திரர்கள் யார்? பகுதி 2, (4) தீண்டப்படாதோர் – யார்? ஏன் தீண்டப்படாதோர் ஆயினர்?, (5) தீண்டப்படாதோர் அல்லது இந்தியச் சேரிகளின் குழந்தைகள், (6) தீண்டப்படாதோர் – தீண்டாமை/சமூகம், மதம் பற்றிய கட்டுரைகள், (7) தீண்டப்படாதோர் – தீண்டாமை : அரசியல் கட்டுரைகள், (8) இந்து மதத்தின் தத்துவம் இந்தியா – பொதுவுடைமைக்கான முன் தேவைகள், (9) பண்டைய இந்தியா: புரட்சி-எதிர்ப்புரட்சி - பகுதி 1 / பௌத்தத்தின் வீழ்ச்சி – சாதிகளின் தோற்றம் (10) பண்டைய இந்தியா: புரட்சி-எதிர்ப்புரட்சி- பகுதி 2 / இந்து மதத்தின் ஆதாரப் பகுதி சாதிதான், ஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொரு தொகுதியும் ஏறக்குறைய 300 பக்கங்கள் அளவில் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளன. மக்கள் பதிப்பான இந்த பத்து தொகுதிகளை தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-01-2025.
13 Jan 2025 -
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் வாழ்த்து
13 Jan 2025சென்னை : துபாயில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள
-
பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: லாஸ் ஏஞ்சல்ஸில் 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் வந்துள்ளது
13 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே
-
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சேவை புரிந்தோருக்கு தமிழக கவர்னர் விருதுகள் அறிவிப்பு
13 Jan 2025சென்னை: சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் சேவை புரிந்தோருக்கான விருதுகளை கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
-
சென்னையிலிருந்து சிறப்பு பேருந்தில் 6.40 லட்சம் பேர் பயணம்
13 Jan 2025சென்னை : கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா? - இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
13 Jan 2025கெய்ரோ : இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்று பொங்கல் பண்டிகை: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
13 Jan 2025சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
13 Jan 2025சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
சனாதன தர்மத்தை மீட்டவர்: வள்ளலாருககு கவர்னர் புகழாரம்
13 Jan 2025கிருஷ்ணகிரி: சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
-
பாக்.கில் சுரங்க விபத்து: 11 பேர் பலி
13 Jan 2025பலூசிஸ்தான் : பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் ஏற்பட்ட வாயுவெடிப்பில் சிக்கி பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்
13 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
-
இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி
13 Jan 2025புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8,500 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
-
தொடர் கனமழை - நிலச்சரிவு: பிரேசிலில் 10 பேர் பலி
13 Jan 2025பிரேசிலியா : பிரேசிலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.
-
ராஜஸ்தானில் கடும் குளிர்: பள்ளிகளுக்கு விடுமுறை
13 Jan 2025ஜெய்ப்பூர் : கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 கேரள மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு
13 Jan 2025திருவனந்தபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு
13 Jan 2025மேட்டூர் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 115.03 அடியில் இருந்து 114.74 அடியாக சரிந்துள்ளது.
-
மகா கும்பமேளாவால் உத்தரப்பிரதேச அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய்
13 Jan 2025லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று தொடங்கியிருக்கும் மகா கும்பமேளாவால் உ.பி.க்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்திற்கு இ.பி.எஸ். வாழ்த்து
13 Jan 2025சென்னை: கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
-
போக்சோ வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கைது
13 Jan 2025மதுரை: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் உற்பத்தி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
13 Jan 2025சென்னை: நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார் .
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஓரிரு நாளில் இந்திய அணி அறிவிப்பு
13 Jan 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று
13 Jan 2025புதுச்சேரி : புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹியூமன் மெட்டா ப்நியூமோவைரஸ் (எச்.எம்.பி.வி) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருவதாக
-
காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்டுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
13 Jan 2025ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் 'இசட்' வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.