முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலி 25 ஆனது

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      உலகம்
Los-Angeles-2025-01-15

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். விலங்குகள் மற்றும் பறவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்து வரும் காட்டுத்தீயில் சிக்கி 25 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் காணாமல் போயுள்ளனர். 12 ஆயிரம் கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், காட்டுத்தீயின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி பாலிசேட்ஸ், ஈட்டன், கென்னத் மற்றும் ஹர்ஸ்ட் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 163 சதுர கி.மீ. பரப்பளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனினும், தி பாலிசேட்ஸ் பகுதியில் 17 சதவீதம் மற்றும் ஈட்டன் பகுதியில் 35சதவீதம் காட்டுத்தீ நேற்றுமுன்தினம் கட்டுக்குள் வந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

இதில், தி பாலிசேட்ஸ் பகுதியில் 8 பேரும், ஈட்டன் பகுதியில் 17 பேரும் உயிரிழந்து உள்ளனர். எனினும், மொத்த சேத மதிப்பு பற்றிய விவரங்கள் பின்னர் மதிப்பிடப்படும். ரூ.4.46 லட்சம் கோடி முதல் ரூ.4.89 லட்சம் கோடி வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட ஆய்வில் மதிப்பிடப்பட்டு உள்ளது. காட்டுத்தீயால் கலிபோர்னியாவில் பேரிடர் ஏற்பட்டு உள்ளது என ஜனாதிபதி பைடன் அறிவித்து உள்ளார்.

தொடர்ந்து காட்டுத்தீ பரவி வரும் சூழலில், சேத மதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காட்டுத்தீயால் ஹாலிவுட் பிரபலங்களான ஆடம் பிராடி, லெய்டன் மீஸ்டர், பெர்கீ, அன்னா பாரிஸ், அந்தோணி ஹாப்கின்ஸ் மற்றும் ஜான் குட்மேன் உள்ளிட்டோர் அவர்களுடைய வீடுகளை இழந்துள்ளனர்.

இதேபோன்று, பிரபல நடிகர்களான மார்க் ஹாமில், மாண்டி மூர் மற்றும் ஜேம்ஸ் உட்ஸ் உள்ளிட்டோரும் காட்டுத்தீயால் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். பாலிசேட்ஸ் கடற்கரை பகுதியில் அமைந்த நடிகர் கேரி எல்விஸ் வீடும் தீயில் எரிந்து போனது. மாலிபு பகுதியில் அமைந்த, பிரபல மாடல், பாடகி மற்றும் நடிகையான பாரீஸ் ஹில்டனின் வீடும் எரிந்து சேதமடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து