முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கான வெகுமதி 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு: மத்திய அரசு புதிய அறிவிப்பு

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      இந்தியா
Nitin-Gadkari

புதுடெல்லி, இந்தியாவில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நல்ல உள்ளங்களுக்கு வெகுமதி தற்போது வழங்கப்படும்  ரூ.5  ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாக்பூரில் நடிகர் அனுபம் கேருடன் அமைச்சர் நிதின் கட்கரி சாலைப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்.

அந்த நிகழ்வின்போது அவர் பேசியதாவது:- சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக (ஒரு மணி நேரத்துக்குள்) மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களுடைய உயிரைக் காப்பற்ற முடியும். இத்தகைய பணியைச் செய்பவர்களுக்கு வெகுமதியாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது மிகவும் குறைவாக உள்ளதால் இந்தத் தொகையை 5 மடங்கு, ரூ.25 ஆயிரம் உயர்த்த சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

இந்தத் திட்டம் தேசிய நெடுஞ்சாலைகளில் காயம் அடைந்தவர்களுக்கு மட்டும் அல்ல, மாநில நெடுஞ்சாலைகளில் காயம் அடைந்தவர்களுக்கும் பொருந்தும். பொதுமக்களை ஊக்குவிப்பதற்கான இந்த வெகுமதி திட்டம் கடந்த 2021-ல் தொடங்கப்பட்டது. பணம், வெகுமதியை எதிர்பார்க்காமல் விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தானாக முன்வந்து முதலுதவி செய்வது, உடனடி சிகிச்சை கிடைக்க உதவி செய்வது நம் அனைவரின் கடமையாகும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து