முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியில் எந்த சிக்கலும் இல்லை: தெற்கு ரயில்வே

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      தமிழகம்
Train-2023-05-01

சென்னை, மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணியில் எந்த சிக்கலும் இல்லை. எந்தப் பிரச்னையும் இல்லை என்று  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த ரயில் திட்டத்துக்கான நில ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாகவே உள்ளது. மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சப்தம் அதிகமாக இருந்ததால், தனுஷ்கோடி ரயில் திட்டம் பற்றி கேட்கப்பட்டதாக நினைத்து அது தொடர்பான பதில் தரப்பட்டது. எனவே, அன்றைய தினம் ரயில்வே அமைச்சர் அளித்த பதில் தனுஷ்கோடி திட்டம் பற்றியது. அதில் தான், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னையால் தனுஷ்கோடி திட்டம் செயல்படுத்துவதில் சிக்கில் இருப்பதாக தமிழக அரசு கடிம் அனுப்பியிருந்தது. ஆனால், இந்த விளக்கத்தை மதுரை - தூத்துக்குடி பற்றிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதிலாக அளித்துவிட்டதால் குழப்பம் நேரிட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மதுரை-தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இது, மதுரை, விருதுநகா், தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில்  தற்போது தெற்கு ரயில்வே  இது குறித்து விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து