முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை உயிரிழப்பு

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      தமிழகம்
Jallikattu-2025-1-15

திருச்சி, திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் உற்சாகமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதேபோல் பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான நேற்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.  

இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி அங்கு மிகவும் புகழ்பெற்றதாகும். திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பது வழக்கம் ஆகும். அதேபோல் இந்தாண்டிற்கான சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை தொடங்கியது.

இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி திருவளர்சோலையை சேர்ந்த அப்பு என்பவரின் காளை காயமடைந்து உயிரிழந்தது. ஜல்லிக்கட்டில் காயமடைந்த காளைக்கு கால்நடை மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்த நிலையில் காளையின் உயிர் பிரிந்தது. 

முன்னதாக வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளையும், களத்தில் இருந்து வாடிவாசலுக்குள் திடீரென நுழைந்த காளையும் முட்டிக்கொண்டதில் திருவளர்சோலை பகுதியை சேர்ந்த காளை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து