முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோவுக்கு அண்ணாமலை வாழ்த்து

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      தமிழகம்
Annamalai 2024 11 20

சென்னை, இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனை என்ற நவீன தொழில்நுட்ப அறிவு பணிக்காக இஸ்ரோ 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது. அவற்றிற்கு சேசர் டார்கெட்  என பெயரிடப்பட்டது. தலா 220 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் செலுத்தியநிலையில், விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களையும் இணைய வைக்கும் சோதனையில் இஸ்ரோ ஈடுபட்டு வந்தது.

இந்த சூழலில் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் வழியே 2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்நிலையில் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றிபெற்றதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகரமான செயல் விளக்கத்திற்காக இஸ்ரோ குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள். ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி இந்தியாவிற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம், ஏனெனில் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவிற்குப் பிறகு விண்வெளியில் இணைக்கும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற நான்காவது நாடாக இது திகழ்கிறது. இந்த மகத்தான சாதனையை அடைய கடுமையாக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து