முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரயான் - 4 திட்டத்திற்கு ஸ்பேடெக்ஸ் வெற்றி உதவும்: மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      இந்தியா
ISRO 2024-09-09

பெங்களூரு, ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனையில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. இதற்காக ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், 2 செயற்கைக்கோள்களை சுமந்தபடி கடந்த 30-ம் தேதி விண்ணில் பாய்ந்தது. ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி  என்ற  2 செயற்கைக்கோள்களும் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. இதன்படி இரு செயற்கைக்கோள்கள் இடையேயான தூரம் 230 மீட்டர் தூரத்தில் இருந்து 15 மீட்டராக குறைக்கப்பட்டு, பின்னர் 3 மீட்டராக குறைக்கப்பட்டது. தீவிர ஆய்வுக்கு பிறகு   2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. 

ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியால் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. 

விண்ணில் செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றது பற்றி இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது,  இந்த சாதனையை செய்து முடித்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியின் வெற்றியை தொடர்ந்து, அதன் முக்கியத்துவம் பற்றி வருகிற வருடங்களில் தெரிய வரும். இந்த திட்டத்தின் வெற்றியானது, சந்திரயான்-4 திட்டத்திற்கு நிறைய உதவும். விண்வெளியில் கிடக்கும் குப்பைகளை நீக்குவதற்கும் உதவ முடியும் என இந்த திட்டம் நிரூபிக்கும். உண்மையில் இது ஒரு நல்ல சாதனையாகும் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து