முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி செய்திகளை பரப்புவது எளிது: விமர்சனங்களுக்கு பும்ரா பதில்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      விளையாட்டு
Bumrah

மும்பை, போலிச் செய்திகளைப் பரப்புவது எளிது என்று எனக்குத் தெரியும் என தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பும்ரா பதிலளித்துள்ளார். 

முதுகில் வீக்கம்...

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின்போது முதுகில் வீக்கம் ஏற்பட்டது. இந்த வீக்கம் குணமாக மார்ச் முதல் வாரம் ஆகும் என கூறப்படுகிறது. அதனால் அவர் லீக் ஆட்டங்களில் ஆட மாட்டார் என கூறப்படுகிறது.

விளையாட முடியாது...

இதனிடையே வீக்கம் குறைய அவர் வீட்டிலேயே படுக்கையில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், 6 மாதம் வரை விளையாட முடியாது எனவும் வதந்திகள் பரவின.  இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு பும்ரா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பும்ரா வெளியிட்டுள்ள பதிவில், "போலிச் செய்திகளைப் பரப்புவது எளிது என்று எனக்குத் தெரியும், ஆனால் இது என்னை சிரிக்க வைத்தது நம்ப முடியாத ஆதாரங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து