முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல் படை தாக்குதல்: காசாவில் 65 பேர் உயிரிழப்பு

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      உலகம்
Israel

காஸா, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 65 பேர்  உயிரிழந்தனர்.

காஸா நகரத்தில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 65க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு அந்த கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு பாலஸ்தீனர்கள் அவர்களது வீடுகளுக்கும் முகாம்களுக்கும் திரும்பியபோது இஸ்ரேல் காஸாவின் மீதான அதன் தாக்குதலை மீண்டும் தொடர்ந்தது. வடக்கு காஸா பகுதி, ஷெயிக் ரட்வான் குடியிருப்புப் பகுதி, மத்திய காஸா ஆகிய இடங்களில் இஸ்ரேல் நடத்திய தரைவழி, வான்வழி மற்றும் டிரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 65 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அங்கு பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள் இந்த தாக்குதல்களில் மொத்தம் 82 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த தொடர் தாக்குதல்களில் சிக்கிய வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதினால், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த கடந்த 1-ம் தேதி அன்று எடுக்கப்பட்ட கணக்குகளின் படி இஸ்ரேல் சிறைகளில் குறைந்தபட்சம் 10,221 பாலஸ்தீனர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதில் இஸ்ரேல் ராணுவத்தினால் போர் காலத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து