முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      தமிழகம்
D-CM-1-2025-01-16

மதுரை, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 1,100 காளைகள் மற்றும் 900 வீரர்கள் பங்கேற்றனர்.

தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, 3-வது நாள் (ஜன. 16) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். அதன்படி, கடந்த 3 நாட்களுக்கு முன் அவனியாபுரத்திலும் நேற்று முன்தினம் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருவதில் ஏற்பட்ட தாமதத்தால் போட்டி சிறிது நேரம் தாமதமாகத் தொடங்கப்பட்டது. போட்டித் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். காலை 8 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் முன்னிலையில் துணை முதல்வர் உதயநிதி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

மொத்தமாக 5,786 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 1000 காளைகளை களமிறக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், களமாடவுள்ள அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காயம்படும் காளைகளை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு கால்நடை மருத்துவக்குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதேபோன்று அவற்றின் மேல்சிகிச்சைக்காக கால்நடை அவசர ஊர்திகளும் மதுரை மாநகராட்சி மற்றும் கால்நடைத்துறை சார்பாக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்தப் போட்டியில் முதல் பரிசாக சிறந்த காளைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கும் டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் காரும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன. அதேபோல் 2-வது பரிசாக காளைக்கு நாட்டினப் பசு மற்றும் கன்று, வீரருக்கு பைக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

போட்டி தொடங்கும் முன் காளைகளை பிடிக்க வந்துள்ள மாடுபிடி வீரர்கள் காலை 7.42 மணி அளவில் உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதன்பின்னர் போட்டிக்கான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், 1,100 காளைகள் மற்றும் 900 வீரர்களுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடர்ந்து பல சுற்றுகளாக விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியை காண்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கூட வந்திருந்து ஜல்லிக்கட்டை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து