முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா வர்த்தக மைய கண்காட்சி; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      இந்தியா
modi 2025-01-17

Source: provided

புதுடெல்லி: டெல்லியில் 6 நாட்கள் நடைபெறும் இந்தியா வர்த்தக மைய கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். போக்குவரத்துத் துறையில் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க விரும்பும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்தியா ஒரு சிறந்த இடமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பாரத மண்டபம், தலைநகரில் உள்ள யசோபூமி மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய மூன்று இடங்களில் இந்தியா வர்த்தக மையம் எனும் கண்காட்சி நடைபெறவிருக்கிறது. பாரத மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். ஜனவரி 17 - 22-ம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது. ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் முதல் வாகன உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ், டயர்கள், எரிபொருள் சேமிப்புத் திறன் உற்பத்தி, ஆட்டோமோட்டிவ் மென்பொருள் நிறுவனங்கள், உதிரி பாகங்கள் மறுசுழற்சி என அனைத்தும் நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

கண்காட்சியைத் தொடங்கிவைத்த பின்னர் கூட்டத்தில் பேசிய மோடி, பசுமைத் தொழில்நுட்பம், மின் வாகனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள் ஆகியவற்றின் வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்துகிறது. மேக் இன் இந்தியா முன்முயற்சியின் வலிமை, நாட்டின் வாகனத் துறையின் வளர்ச்சி வாய்ப்புகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்திய அவர், பத்தாண்டுகளின் முடிவில் மின்சார வாகனங்களின் விற்பனை எட்டு மடங்கு அதிகரிக்கும் என்றார்.

பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை ஆதரிக்கக் கூடிய ஒரு இயக்கம் அமைப்பில் அரசு செயல்பட்டு வருவதாகவும், புதை படிவ எரிபொருள்களின் இறக்குமதியில் நாட்டின் செலவைக் குறைக்கக் கூடிய ஓர் அமைப்பை உருவாக்குவதாகவும் அவர் கூறினார். ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியில் 'மேக் இன் இந்தியா' முயற்சி பெரும் பங்காற்றியுள்ளது. இந்த முயற்சியானது பிஎல்ஐ (உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை) திட்டத்திலிருந்து உந்துதல் பெற்றுள்ளது, இது ரூ.2.25 லட்சம் கோடிக்கு மேல் விற்பனைக்கு உதவியது. 

இந்த திட்டம் ஆட்டோமொபைல் துறையில் 1.5 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பயணத்தை எளிதாக்குவது இந்தியாவின் முக்கிய முன்னுரிமை. கடந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டது. மேலும் நெடுஞ்சாலைகளில் பலவழிச்சாலையையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் வாகனத் தொழில் அற்புதமானது மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடந்தாண்டு 12 சதவீத வருடாந்திர வளர்ச்சியைக் கண்டது, ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது என்றார். இத்துறையில் முதலீடு செய்ய கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவித்த மோடி, அதிகரித்து வரும் நடுத்தர வர்க்கம், விரைவான நகரமயமாக்கல், உயர்தர உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மலிவு விலை வாகனங்கள் ஆகியவை ஆட்டோமொபைல் துறையில் வரப்போகின்றன என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து