முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சந்திரபாபு

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      விளையாட்டு
chandrababu-naidu

Source: provided

புதுடெல்லி : ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து வாழ்த்தினார்.  ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டி இந்திய அணியில் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்து. அதிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

ஆல் ரவுண்டர்

அதன் காரணமாக சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டராக 5 போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இதில் பேட்டிங்கில் அவர் மொத்தமாக 298 ரன்கள் குவித்தார். இதில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 114 ரன்கள் அடித்து அசத்தியதன் மூலம் அனைவரது கவனைத்தையும் ஈர்த்துள்ளார். மெல்போர்னில் சதமடித்து அசத்திய நிதிஷ் ரெட்டிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

சந்திரபாபு நாயுடு நேரில் வாழ்த்து

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து வாழ்த்தினார். அப்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் நிதிஷ் ரெட்டிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையையும் அவர் வழங்கினார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சந்திரபாபு நாயுடு பகிர்ந்துள்ளது பின்வருமாறு:- "அற்புதமான திறமை கொண்ட நம்முடைய கிரிக்கெட்டர் நிதிஷ் ரெட்டியை இன்று சந்தித்தேன். உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நிதிஷ் தெலுங்கு சமூகத்தின் பிரகாசமான நட்சத்திரம். அவரது பயணம் மற்றும் அவரின் பெற்றோர்களின் அசைக்க முடியாத ஆதரவை நான் பாராட்டினேன். அவர் இன்னும் பல சதங்கள் அடித்து வரும் வருடங்களில் இந்தியாவுக்கு தொடர்ந்து வெற்றியை பெற்றுக் கொடுக்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து