முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      உலகம்
Imran-Khan 2024 07 16

Source: provided

இஸ்லாமாபாத் : ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அல்-காதிர் அறக்கட்டளை மூலம் 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சிறை தண்டனையோடு இம்ரான் கானுக்கு ரூ.10 லட்சம் மற்றும் புஸ்ரா பீவிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால் இம்ரான் கானுக்கு கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும், புஸ்ரா பீவிக்கு 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த பல்வேறு மூத்த தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து