முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      தமிழகம்
Tairn 2023-05-25

Source: provided

சென்னை : பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை வரும் பயணிகளுக்காக வரும் 19ம் தேதி ஞாயிறு மண்டபம் - சென்னை எழும்பூர் (06048), தூத்துக்குடி - தாம்பரம் (06168),மதுரை - சென்னை எழும்பூர்  (06062) முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை ஈடுகட்ட ஒரு வழி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்:

ரயில் எண் 06048 மண்டபம் சென்னை எழும்பூர் ஒரு வழி சிறப்பு ரயில்  நாளை (ஞாயிற்றுக்கிழமை) மண்டபத்தில் இருந்து இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயில்,மண்டபம், பரமக்குடி மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி ஜே.என். தஞ்சாவூர், கும்பகோணம் மயிலாடுதுறை ஆடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர்  துறைமுகம் ஜே.என், பண்ருட்டி, விழுப்புரம்,திண்டிவனம்,மேல்மருவத்தூர்,செங்கல்பட்டு, தாம்பரம்,மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண் 06168 தூத்துக்குடி தாம்பரம் ஒரு வழி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 4.25 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

இந்த ரயில்,  வாஞ்சிமணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம்,மேல்மருவத்தூர் ,செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண் 06061/06062 சென்னை எழும்பூர் மதுரை சென்னை எழும்பூர் முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சென்னை எழும்பூரிலிருந்து இன்று (சனிக்கிழமை) காலை 10.45 மணி முதல் இரவு 7.15 மணிக்கு மதுரையை சென்றடையும் .

மறுமார்க்கத்தில், ரயில் எண். 06062 மதுரை-சென்னை எழும்பூர் முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 00.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும் .

இந்த ரயில், இரு மார்க்கத்திலும் மேல்மருவத்தூர், திண்டிவனம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடை ரோடுஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து