முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியமானது : நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      தமிழகம்
Thangam 2024-09-14

Source: provided

விருதுநகர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசின் நிதி நிலைமை குறித்து தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளதாவது:- தமிழக நிதிநிலை குறித்து எடப்பாடி பழனிசாமி தவறான தகவல்களை கூறி வருகிறார். தமிழ்நாடு அரசு திவாலாகிறது என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் வரம்புக்கு உட்பட்டு கடன் வாங்கப்படுகிறது.  2021-22 நிதியாண்டில் 28.7 சதவீதம் அளவுக்கு கடன் வாங்கலாம் என நிதிக்குழு பரிந்துரை செய்த நிலையில், 27.01 சதவீதம் அளவுக்கே கடன் வாங்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், நிதி, மேலாண்மை குறித்து அடிப்படையற்ற புகார்களை எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

உள்நாட்டு உற்பத்தி அளவைப்பொறுத்தே கடன் வாங்கும் அளவு, திருப்பி செலுத்தும் திறன் முடிவு செய்யப்படுகிறது.  அரசின் பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதிதராததால் சொந்த நிதியை மாநில அரசு பயன்படுத்துகிறது. ஜி.எஸ்.டி. வரிப்பகிர்வில் மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; 4 தென் மாநிலங்களுக்கும் சேர்த்தே ரூ.27,000 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதிச் சுமையையும் நாங்கள்தான் சரி செய்கிறோம். சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசின் நிதி நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது. 

பரந்தூர் விமான நிலையம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது. பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் சென்னை விமான நிலையம் மட்டும் போதாது. எதிர்கால போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு உட்கட்டமைப்பு தேவைகள் அவசியமாகின்றன. எதிர்காலத்தில் தொழிற்புரட்சிக்கு வித்திடும் ஒன்றாக பரந்தூர் விமான நிலையம் இருக்கும். 

விமான நிலையங்களை உருவாக்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது. தற்போது உள்ள விமான நிலையம் மிகச் சிறிய ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. தொழில், வர்த்தக கட்டமைப்பை உறுதிசெய்ய பரந்தூர் விமான நிலையம் உருவாக்கப்படுகிறது. பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய் அவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு கூறலாம். போராடும் மக்களை ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து