முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2025      தமிழகம்
Stalin 2022 12 29

Source: provided

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது; அதனால்தான் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் இங்கு தொடர்ந்து வருகின்றன. அங்கொன்றும், இங்கொன்றும் நடப்பதை வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்குகின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடியில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முன்னதாக கன்னிகாபுரம் பகுதியில் தன்னை வரவேற்பதற்காக காத்திருந்த மாணவர்களுக்கு பாக்ஸிங் கிளவுஸில் ஆட்டோகிராப் போட்டும், செல்பிக்கு போஸ் கொடுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ந்தார்.

அதனபின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

திராவிட மாடல் ஆட்சிக்கு பின், வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்காக சட்டப்பேரவையில் ரூ.1,000 கோடி முதலில் ஒதுக்கி அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன், தற்போது ரூ.6,350 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு வருடத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடையும். வட சென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றுவோம்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது; அதனால்தான் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் இங்கு தொடர்ந்து வருகின்றன. அங்கொன்றும், இங்கொன்றும் நடப்பதை வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்குகின்றன.

கவர்னர் எல்லா பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராகதான் செயல்படுகிறார். அது எங்களுக்கு நல்லதாகவே உள்ளது. அவர் இதை தொடர்ந்து செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவரின் இப்போக்கு ஆட்சிக்கு சிறப்பைதான் சேர்க்கிறது.

பெரியாரை மரியாதை குறைவாக பேசக்கூடியவர்களுக்கு, நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. பெரியார்தான் எங்களுக்குத் தலைவர். எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார். எனவே, அவதூறுகளை பெரிதுபடுத்தவும், பொருட்படுத்தவும் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து