முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈ.சி.ஆரில் காரை துரத்திய சம்பவம்: 4 பேர் கைது - 2 கார்கள் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2025      தமிழகம்
ECR-2025-01-30

Source: provided

சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பாலம் அருகே ஜன. 25 அன்று காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் வந்த சிலர், துரத்தும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பெண்கள் சென்ற காரை நடுரோட்டில் நிறுத்தி இளைஞர்கள் மிரட்டியதும், பெண்கள் காரை ரிவர்ஸில் எடுத்து வேகமாகச் சென்றுள்ளனர். உடனே இளைஞர்களும் மற்றொரு காரில் சென்று பெண்களை அவர்கள் வீடு வரை துரத்திச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கானத்தூர் போலீசார் தெரிவித்தனர்.மேலும் அந்த இளைஞர்களை கைது செய்ய பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் சந்துரு என்பவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 3 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காரில் வந்த இளைஞர்களுக்கும் தி.மு.க.வுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து