முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்திற்கு பழனியில் இருந்து காவடியுடன் புறப்பட்ட பா.ஜ.வினர் கைது

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      தமிழகம்
BJP 2023-11-05

Source: provided

திண்டுக்கல் : பழனியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட பா.ஜ.க.வினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட நிலையில், இந்து முன்னணி போன்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, நேற்று இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்பினர் அறப்போராட்டத்துக்கு அழைப்பை விடுத்தனர். இதன்படி, குன்றம் காக்க, குமரனை காக்க என்ற கோரிக்கையுடன் 3-ம் படையில் இருந்து முதல் படையை நோக்கி, நேற்று (செவ்வாய்கிழமை) காலை திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆன்மிகப் பிரிவு மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி தலைமையில் காவடிகளுடன் பாதயாத்திரை புறப்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, மதுரையில் 144 தடை உத்தரவு உள்ளதால் வெளி நகர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை. தடையை மீறி செல்ல முயன்றால் கைது செய்யப்படும் என்று கூறினர். அதனை மீறி, திருப்பரங்குன்றம் புறப்பட்ட 10 பெண்கள் உட்பட பாஜக.வினர் 100 பேரை, பழநி டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையிலான போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து