முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டி-20 தரவரிசை: அபிஷேக் சர்மா முன்னேற்றம்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      விளையாட்டு
Abisak-Sarma 05-02-2025

Source: provided

துபாய் : ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா. 

திலக் வர்மா.... 

இங்கிலாந்து உடனான 5ஆவது டி20 போட்டியில் அதிரடியாக சதமடித்த அபிஷேக் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி 4-1 என தொடரை வென்றது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடத்தை பிடித்துள்ளார். திலக் வர்மா 3ஆம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டார். அடுத்தடுத்த வரிசையில் பிலிப் சால்ட், சூர்யகுமார் யாதவ், ஜாஸ் பட்லர் ஆகியோர்கள் இருக்கிறார்கள்.

டிராவிஸ் ஹெட்... 

முதலிடத்தில் ஆஸி. அதிரடி மன்னன் டிராவிஸ் ஹெட் 855 புள்ளிகளுடன் இருக்கிறார். 24 வயதாகும் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் பாணி முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் மாதிரி இருப்பதாக பலரும் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள். யுவராஜ் சிங்தான் அபிஷேக் சர்மாவுக்கு பயிற்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.

டி-20 பேட்டர்கள் தரவரிசை:

1. டிராவிஸ் ஹெட் - 855 புள்ளிகள்.

2. அபிஷேக் சர்மா - 829 புள்ளிகள்.

3. திலக் வர்மா - 803 புள்ளிகள்.

4.பிலிப் சால்ட் - 798 புள்ளிகள்.

5. சூர்யகுமார் யாதவ் - 738 புள்ளிகள்.

6. ஜாஸ் பட்லர் - 729 புள்ளிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து