முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      தமிழகம்
Electronic-Machine 2023-10-

Source: provided

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. பகல் 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 3 தினங்களுக்கு முன் (பிப்.05) நடந்தது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளா்களுடன் 46 பேர் போட்டியிட்டனர். 53 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 237 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு வி.வி.பேட் கருவி என வாக்குச்சாவடியில் எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. காலை முதல் மாலை வரை வாக்காளர்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டனர். இறுதியில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி.) வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறை மற்றும் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்கு வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும்.

பொதுமக்கள், கட்சியினர் என அனைவரும் சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் நுழைவு வாயில் அருகே நின்று தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பகல் 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வெற்றி பெறுமா? அல்லது நா.த.க வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து