முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி. நோட்டீஸ்

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      இந்தியா
UGC

 புதுடில்லி, ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசிய பல்கலைக் கழக மானியக் குழு செயலாளர் மனீஷ் ஜோஷி, மாணவர்களிடம் இருந்து ராங்கிங்கிற்கு எதிரான முயற்சிகளைப் பெற இந்தக் கல்வி நிறுவனங்கள் தவறிவிட்டதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

ராகிங் தடுப்புச் சட்டம் 2009-ன் படி, ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்திலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அல்லது அவர்களின் பாதுகாவலர்களிடமிருந்து ராகிங்கிற்கு எதிரான உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாகப் பெறுவது கட்டாயம்.

வளாகத்துக்குள் ராகிங் கொடுமை நடக்காமல் தடுப்பதற்காக கல்வி நிலையங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான நடவடிக்கையாகும். ஆனால் இக்கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்ற தவறியது மட்டுமல்ல; மாணவர்களின் நலன் மீது அலட்சியமாக செயல்பட்டதையே காட்டுகிறது எனக் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து