முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலெக்ஸ் கேரி புதிய சாதனை

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      விளையாட்டு
Australia-1 2024-06-21

Source: provided

இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், குனமென், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி  2ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது. அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் சுமித் 120 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆசிய மண்ணில் சதம் அடித்த 2-வது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை அலெக்ஸ் கேரி படைத்துள்ளார்.  இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா தரப்பில் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் மட்டுமே ஆசிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்திருந்தார். தற்போது அலெக்ஸ் கேரி 2-வது விக்கெட் கீப்பராக அந்த சாதனையை படைத்துள்ளார். 

______________________________________________________________________________

அதிக சதங்கள்-சுமித் முதலிடம்

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் 191 பந்துகளில்  சதமடித்தார் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். முன்னதாக முதல் டெஸ்ட்டிலும் சதமடித்த ஸ்டீவ் ஸ்மித் அதே போட்டியில் 10,000 டெஸ்ட் ரன்களை கடந்திருந்தார். இந்த டெஸ்ட் சதத்துடன் கேப்டனாக இது 17ஆவது சதம். ஆசியாவில் மட்டுமே இது 7ஆவது சதம். கடைசி 5 போட்டிகளில் இது 4ஆவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி  2ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது. அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் சுமித் 120 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆசியாவில் அதிக சதங்கள் அடித்த ஆஸி. வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் சுமித்  முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்பு ஆலன் பார்டர் 6, ரிக்கி பாண்டிங் 5 சதங்கள் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

______________________________________________________________________________

கனவு போல இருக்கிறது: ராணா 

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.  இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்த மைதானத்தின் பிட்ச் இருதலைப் பட்சமாக இருந்ததாக இந்திய இளம் வீரர் ஹர்ஷித் ராணா கூறியுள்ளார். போட்டி முடிந்த பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, தொடர்ச்சியாக நல்ல லென்த்தில் பவுலிங் செய்வதே எனது முதன்மையான இலக்காகும். ஆரம்பத்தில்  அவர்கள் அதிரடியாக விளையாடப் பார்த்தார்கள். அதை நானும், ரோகித்தும் விவாதித்தோம்.  பிட்ச் இருதலைப் பட்சமாக இருந்தது. அதன் காரணமாக சில பந்துகள் திடீரென நின்று வந்தது. இந்தப் போட்டியில் அறிமுகமானது எனது கனவு வாழ்க்கைப் போல இருக்கிறது. இதற்காக நான் கடினமாக உழைத்துள்ளேன். அந்த உழைப்புக்கான பரிசு தற்போது ஒரு வழியாக எனக்கு வந்து சேர்வதாக உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து