முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தான் வீரர் விலகல்

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2025      விளையாட்டு
Afghanistan 2024-06-25

Source: provided

8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி களம் காண்கிறது. இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இளம் வீரரான அல்லா கசன்பர் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் தொடரின் போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காயம் குணமடைய குறைந்தது 4 மாதங்கள் ஆகும் என்பதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ரிசர்வ் வீரராக இருந்த நங்யால் கரோட்டி 15 பேர் கொண்ட முதன்மை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

___________________________________________________________________________________________________

வீராங்கனைக்கு 5 ஆண்டு தடை 

வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் 36 வயதான ஷோஹேலி அக்தர். இவர் வங்காளதேச அணிக்காக 2 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியில் இடம் பெறவில்லை.  இருப்பினும் அந்த சமயத்தில், முகநூல் பக்கத்தின் மூலம் தனது தோழி மற்றும் சக கிரிக்கெட் வீராங்கனை ஒருவரை தொடர்பு கொண்டு உரையாடிய போது, உலகக் கோப்பையில் குறிப்பிட்ட ஆட்டத்தில் 'மேட்ச் பிக்சிங்' என்ற சூதாட்டத்தில் ஈடுபடும்படி வற்புறுத்தினார்.

'ஹிட்விக்கெட்' முறையில் விக்கெட்டை இழந்தால் பெரிய தொகை தருவதாக அந்த வீராங்கனைக்கு ஆசை காட்டினார். அதை ஏற்க மறுத்த அந்த வீராங்கனை உடனடியாக ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய ஐ.சி.சி. ஷோஹேலி அக்தர் மீது 5 பிரிவுகளில் குற்றச்சாட்டை பதிவு செய்து விசாரித்தது. இதன் முடிவில் அவருக்கு 5 ஆண்டு தடை விதித்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து