முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெ. நினைவுகள் என்றென்றும் மக்களின் மனதில் நிறைந்திருக்கும் : நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      சினிமா
Rajini

Source: provided

சென்னை : ஜெயலலிதா மறைந்தாலும் அவருடைய நினைவுகள் என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.  பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா நேற்று (பிப்.24) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த போயஸ் கார்டன் வீட்டுக்கு நான்காவது முறையாக வருகிறேன். 77ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் நான் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. அவர் என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அப்போது முதல் முறை வந்திருந்தேன். இரண்டாவது முறை என்னுடைய ராகவேந்திரா கல்யாண மண்டப திறப்பு விழாவுக்கு அழைப்பதற்காக வந்திருந்தேன். அதன் பிறகு என் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தேன்.

ஜெயலலிதா மறைந்தாலும் அவருடைய நினைவுகள் என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும். அவர் வாழ்ந்த வீட்டில் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து