முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவியை உதறத்தயார்: அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      உலகம்
Jelensky 2024-05-04

Source: provided

வாஷிங்டன் : உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் அதிபர் பதவியை விட்டு விலக தயாராக  இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே, 'உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி போல் செயல்படுகிறார். இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார் என ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன். உக்ரைனுக்கு நோட்டோ உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். ரஷியாவின் முழுமையான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு டிரம்ப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மிகவும் தேவை. உக்ரைன் மற்றும் ரஷியா இடையே டிரம்ப் மத்தியஸ்தராக இருக்க வேண்டும் என்றார்.

நோட்டோ நாடுகளுக்கு நேட்டோ படைகள் பாதுகாப்பு தரும். குறிப்பாக நேட்டோ உறுப்பு நாட்டை யாராவது தாக்கினால், பதிலாக அனைத்து நேட்டோ நாடுகளும் ஆதரவாக வரும். இது தனக்கான பாதுகாப்பைத் தரும் என உக்ரைன் கருதுகிறது. நோட்டோவில் உக்ரைன் உறுப்பினராக இணைய ரஷியா மறுப்பு தெரிவித்ததே போருக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து