முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் இந்தியருக்கு 40 ஆண்டு சிறை

சனிக்கிழமை, 8 மார்ச் 2025      உலகம்
Jail 2024-05-01

Source: provided

ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலியா நாட்டில் 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இந்து மதத் தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் இந்திய சமூகத் தலைவராக அறியப்பட்டவர் பாலேஷ் தன்கர் (வயது 43), இவர் அந்நாட்டின் இந்து மத ஆணையத்தின் செய்தி தொடர்பாளராக செயல்பட்டதுடன் பாரதிய ஜனதா கட்சியின் அந்நாட்டு குழு ஒன்றையும் உருவாக்கி நிர்வாகித்து வந்துள்ளார். இந்நிலையில், தன்கர் போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு, வேலைத் தேடி வந்த பெண்களை சிட்னி நகரத்திலுள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து, மயக்க மருந்து அளித்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அவரது இந்த குற்றங்களை விடியோ பதிவு செய்ததுடன், தனது கணிணியில் எக்ஸ்ல் சீட்டு ஒன்றை உருவாக்கி அதில் அப்பெண்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் அறிவு, தோற்றம் குறித்து மதிப்பளித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இதில், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் 21 முதல் 27 வயதுக்குட்பட்ட கொரியா நாட்டினர் எனவும் இந்த குற்றத்தின்போது அவர்கள் அனைவரும் மயக்கநிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து