முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி எம்.பி.க்களை ஒருங்கிணையுங்கள் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 9 மார்ச் 2025      தமிழகம்
CM 2024-12-21

Source: provided

சென்னை : தொகுதி மறுவரையறை பல மாநிலங்களின் பிரச்சினை என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும் ஒருங்கிணையுங்கள் என்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்காக தங்கள் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகின்றன. அந்தவகையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக திமுக எம்.பி.க்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க .எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சினை. பல மாநிலங்களின் பிரச்சினை. எனவே தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும், திமுக எம்.பி.க்கள் ஒருங்கிணைத்து, டெல்லியில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். டெல்லியில் உடனடியாக தமிழ்நாடு எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி கருத்துக்களைப் பெற்று செயல்பட வேண்டும். தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கும் கடிதம் எழுதுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பாக மற்ற மாநிலங்களுக்கு அமைச்சர்கள் சென்று அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆந்திராவுக்கு எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி, ஒடிசா மாநிலத்திற்கு டி.ஆர்.பி. ராஜா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து