எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தொகுதி மறு சீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்பட திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்: 1
தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முதல்வரின் சீரிய முயற்சிகளுக்கு துணை நின்று பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.
தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஜனநாயகப் போராளியாகத் திகழ்கின்ற திமுக தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் இந்திய பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என உறுதியளிப்பதுடன், தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், தமிழ்நாடு பல துறைகளிலும் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான ஹிந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது.
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலிய தென்னிந்திய மாநிலங்களைப் பழி வாங்குகிற வகையில் பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, இப்பிரச்னையைக் கையில் எடுத்திருக்கும் முதலமைச்சருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சருடைய அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையாகத் துணை நிற்பதுடன் பாராளுமன்றத்தில் இப்பிரச்னைகளை முன்வைத்துப் போராடி, தமிழ்நாட்டிற்குரிய பாராளுமன்றத் தொகுதிகளில் ஒன்றுகூட குறையாத வகையிலும், பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம்: 2
மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்.
தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையில், 50க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயம் பெறுவதற்கான இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக நின்று, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம்: 3
தொகுதி மறுசீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்படுவோம்
பாராளுமன்ற நிதிநிலை அறிக்கையின் இரண்டாவது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 10-ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், தில்லியில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
நேற்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்த 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை
09 Mar 2025சென்னை : தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி எம்.பி.க்களை ஒருங்கிணையுங்கள் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
09 Mar 2025சென்னை : தொகுதி மறுவரையறை பல மாநிலங்களின் பிரச்சினை என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும் ஒருங்கிணையுங்கள் என்று தி
-
பாராளுமன்றம் இன்று கூடுகிறது
09 Mar 2025புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வுக்காக பாராளுமன்றம் இன்று கூடுகிறது.
-
உ.பி.யில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
09 Mar 2025லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு: விமலாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Mar 2025சென்னை : சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான விமலாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கை வருகை
09 Mar 2025சென்னை : இன்றும், நாளையும் (மார்ச் 10, 11 தேதிகளில்) முதல்வர் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வருகை தந்து 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-03-2025
09 Mar 2025 -
ஜக்தீப் தன்கரை நலம் விசாரித்த பிரதமர் மோடி: விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ட்வீட்
09 Mar 2025புதுடெல்லி : குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் உடல்நலன் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த பிரதமர் மோடி, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகத் தெ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-03-2025
09 Mar 2025 -
ஜி.எஸ்.டி. விகிதங்கள் மேலும் குறையும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் தகவல்
09 Mar 2025மும்பை : சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி. ) விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
-
ம.பி. யில் வருகிறது புதிய சட்டம்: பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை
09 Mar 2025போபால் : பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்வபவருக்கு மரணத் தண்டனை வழங்குவதற்காக மாநிலத்தின் மதமாற்ற தடைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கான பணிகளை பா.ஜ.க.&nbs
-
தமிழ்நாட்டில் எதிலும் அரசியல்தான்: மகாராஷ்டிர மாநில கவர்னர் வேதனை
09 Mar 2025கோவை : இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வது என்பது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது என்று மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
விலங்குகளை பாதுகாப்பதில் நாம் முன்னணியில் இருப்போம் : பிரதமர் நரேந்திரமோடி பதிவு
09 Mar 2025புதுடெல்லி : விலங்குகளை பாதுகாப்பதிலும், பூமியின் நிலைத்தன்மைக்கு பங்களிப்பதிலும் நாம் எப்போதும் முன்னணியில் இருப்போம்" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
நெஞ்சுவலி காரணமாக துணை ஜனாதிபதி டெல்லி மருத்துவமனையில் அனுமதி
09 Mar 2025புதுடெல்லி : குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் நெஞ்சுவலி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க
-
அமெரிக்காவில் இந்து கோயில் சேதம்: மத்திய அரசு கடும் கண்டனம்
09 Mar 2025புதுடெல்லி : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோயிலில் நடந்த நாசவேலைக்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 74,922 வழக்குகளுக்கு தீர்வு; 659 கோடி ரூபாய் இழப்பீடு
09 Mar 2025சென்னை : தமிழகம் முழுவதும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 74 ஆயிரத்து 922 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.659 கோடி இழப்பீடு வழ
-
பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக்கான் உள்பட 3 நடிகர்களுக்கு சிக்கல்
09 Mar 2025ஜெய்ப்பூர் : பான் மசாலா விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷராப் ஆகியோர் ஆஜராக ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: தி.மு.க. எம்பிக்கள் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் தீர்மானம்
09 Mar 2025சென்னை : தொகுதி மறு சீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்பட திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
-
சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். ஆலோசனை
09 Mar 2025சென்னை : அ.தி.மு.க.வின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.
-
விசைத்தறியாளர்களை ஏமாற்றும் தி.மு.க. அரசு: ஓ.பி.எஸ். கண்டனம்
09 Mar 2025சென்னை : வேட்டி, சேலை கொள்முதலில் மக்களையும், விசைத்தறியாளர் களையும் ஏமாற்றுகிறது தி.மு.க. என்று என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மயிலாடுதுறை போலீசார் கூண்டோடு இடமாற்றம்
09 Mar 2025மயிலாடுதுறை : மயிலாடுதுறை பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய 19 போலீசாரை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
-
இந்தி தெரியாததால் எந்த கஷ்டமும் இல்லை: கனிமொழி எம்.பி. பேட்டி
09 Mar 2025சென்னை : இந்தி தெரியாததால் தனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
சிரியா உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலி
09 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் உள்நாட்டுப் போரில் 2 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.
-
வார விடுமுறையையொட்டி குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
09 Mar 2025கன்னியாகுமரி : வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்..
-
ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதால் பதற்றம்
09 Mar 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.