முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலங்குகளை பாதுகாப்பதில் நாம் முன்னணியில் இருப்போம் : பிரதமர் நரேந்திரமோடி பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 9 மார்ச் 2025      இந்தியா
Modi PM 2024-12-20

Source: provided

புதுடெல்லி : விலங்குகளை பாதுகாப்பதிலும், பூமியின் நிலைத்தன்மைக்கு பங்களிப்பதிலும் நாம் எப்போதும் முன்னணியில் இருப்போம்" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் உள்ள மாதவ் தேசிய பூங்கா, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மோகன் யாதவ், இதனை இன்று (திங்கள் கிழமை) திறந்து வைக்க இருக்கிறார். இது மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகமாகும். இதற்கு முன், சத்புரா, பெஞ்ச், பந்தவ்கர், கன்ஹா, சஞ்சய் துப்ரி, பன்னா, ராணி துர்காவதி மற்றும் ரதபாணி புலிகள் காப்பகங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன் தொடர்ச்சியாக, மாதவ் தேசிய பூங்காவை 9வது புலிகள் காப்பகமாக அமைப்பதற்கான முயற்சி முதல்வர் மோகன் யாதவால் 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

மத்தியப் பிரதேச அரசின் இந்த முன்முயற்சியை பாராட்டி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "பூமியின் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையை மீட்டெடுப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று முக்கியத்துவம் அளித்ததன் காரணமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியா தொடர்ந்து பெரும் முன்னேற்றங்களைச் செய்து வருகிறது.

இதில், மத்தியப் பிரதேசத்தின் மாதவ் புலிகள் காப்பகம் இணைந்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது மத்தியப் பிரதேசத்தின் 9வது புலிகள் காப்பகம். அனைத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பாதுகாவலர்களையும் நான் வாழ்த்துகிறேன். இந்த வளர்ச்சி, தன்னலமின்றி இந்த நோக்கத்திற்காக பாடுபடும் நமது வன அதிகாரிகளின் இடைவிடாத முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பூபேந்தர் யாதவின் பதிவை டேக் செய்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், "வனவிலங்கு பிரியர்களுக்கு ஆச்சரியமான செய்தி! இந்தியா வனவிலங்கு பன்முகத்தன்மையாலும், வனவிலங்குகளைக் கொண்டாடும் கலாச்சாரத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளைப் பாதுகாப்பதிலும், பூமியின் நிலைத்தன்மைக்கு பங்களிப்பதிலும் நாம் எப்போதும் முன்னணியில் இருப்போம்" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து