முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு

ஞாயிற்றுக்கிழமை, 9 மார்ச் 2025      விளையாட்டு
India 2024-01-29

Source: provided

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில்  நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி... 

ஐ.சி.சி.  சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று (மார்ச் 9) நடைபெற்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது.

சிறப்பான தொடக்கம்...

நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இந்த இணை நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், வில் யங் 15 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின், ரச்சின் ரவீந்திராவுடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார்.  இந்த இணை இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டினை முதல் பந்திலேயே வீழ்த்தினார் குல்தீப் யாதவ். ரச்சின் ரவீந்திரா 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின், கேன் வில்லியம்சனை 11 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் குல்தீப் யாதவ்.

பிரேஸ்வெல் 53 ரன்கள்... 

அதன் பின், டாம் லாதம் 14 ரன்களில் ஆட்டமிழக்க டேரில் மிட்செல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தியது. இந்த பார்ட்னர்ஷிப்பை வருண் சக்கரவர்த்தி உடைத்தார். கிளன் பிலிப்ஸ் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதான ஆட்டத்தையை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் அரைசதம் கடந்தார். அவர் 101 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக 40 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

252 ரன்கள் இலக்கு...

இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து