முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கை வருகை

ஞாயிற்றுக்கிழமை, 9 மார்ச் 2025      தமிழகம்
cm 2025-01-23

Source: provided

சென்னை : இன்றும், நாளையும் (மார்ச் 10, 11 தேதிகளில்) முதல்வர் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வருகை தந்து 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக ஏற்பாடுகள் திவீரமாக நடைபெற்று வருகின்றன.

கோத்ரேஜ் ஆலை....

தமிழக முதல்வரின் செங்கை வருகை அட்டவணைப்படி, இன்று (மார்ச் 10-ம் தேதி) காலை 10.00 மணி பையனூர் சிப்காட்டில் கோத்ரேஜ் ஆலையை திறந்து வைக்கிறார். நெம்மேலி லீலாவதி திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மறுநாள் 11ம் தேதி திருக்கழுகுன்றத்தில் ரோடு ஷோ - மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதேபோல் ராட்டின கிணறு சந்திப்பு மேம்பாலம் கீழ்பகுதி முதல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை திருமணி சந்திப்பு வரை ரோடு ஷோ மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

47,749 பேருக்கு...

பின்னர் 10 மணி அளவில் ஆட்சியர் அலுவலகம் அருகே திறந்த வெளி மேடையில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட 25 துறைகளில், 47,749 பேருக்கு ரூ.389.53 கோடி மதிப்பில் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்காக ஏற்பாடுகள் திவீரமாக நடைபெற்று வருகின்றன. அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஆட்சியர் அருண்ராஜ் ஆகியோர் பணிகளை கவனித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து