முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்யூரில் சிப்காட் தொழில் பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      தமிழகம்
CM-5 2025-03-11

சென்னை, செய்யூரில்,  சுமார் 800 ஏக்கர்  பரப்பளவில்புதிய சிப்காட் தொழில் பூங்கா  அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

கடந்த நான்காண்டுகளில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தைவளர்த்தெடுக்க ஏராளமான பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.. மறைமலைநகரில் புதிய தாவரவியல் பூங்கா உலகப்புகழ் பெற்ற  ‘லண்டன் க்யூ கார்டன்’அதனுடன்சேர்ந்து 300 கோடி ரூபாய்  மதிப்பீட்டில்  அமைக்கப்பட இருக்கிறது.  

பணிபுரியும் பெண்களுக்கான  தோழி விடுதிகள்,  கூடுவாஞ்சேரிமற்றும்  தாம்பரத்தில், 25 கோடி ரூபாய்  மதிப்பீட்டில்  கட்டிமுடிக்கப்பட்டு  செயல்பாட்டில் இருக்கிறது.. நங்கநல்லூர்  மெட்ரோ ரயில் நிலையம்  அருகே  52 சென்ட்கபரிஸ்தான் அமைச்சர் அன்பரசன் கோரிக்கையை ஏற்றுஅதுவும்  அமைக்கப்பட இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஒரு புதிய அறிவிப்பையும்  இந்த விழாமூலமாக  நான் அறிவிக்க விரும்புகிறேன். அப்படி அறிவிக்கவில்லைஎன்றால்  அன்பரசன் என்னை விடமாட்டார். தொழில்துறையில்முன்னணியில் இருக்கக்கூடியது செங்கல்பட்டு மாவட்டம். நேற்று முன்தினம் கூடஅதற்கு உதாரணமாக, அடிக்கல் நாட்டிய ஒரே ஆண்டில் அந்தப்பணிகளை முடித்து கோத்ரெஜ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை நான்வந்து தொடங்கி வைத்தேன்.

செங்கல்பட்டு மாவட்டத்தில்,  தொழில் வளர்ச்சியை  மேலும்ஊக்குவிக்கின்ற  வகையில், செய்யூரில்,  சுமார் 800 ஏக்கர்  பரப்பளவில்புதிய சிப்காட் தொழில் பூங்கா  அமைக்கப்படும் என்று இந்த விழாமூலமாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றன். நாங்கள் எதைஅறிவித்தாலும் அதெல்லாம், அரசாணையாகும். வேகமாகசெயல்பாட்டிற்கு வரும். அதுமட்டுமல்ல, திட்டங்களை முடித்து, திறப்புவிழாவுக்கு நானே வருவேன்.இப்படி, துரிதமாக  செயல்படுகின்ற காரணத்தால் தான்இந்தியாவின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக தமிழ்நாடுஇன்றைக்கு உயர்ந்திருக்கிறது. பொருளாதாரக் குறியீடுகள்எல்லாவற்றிலும் தமிழ்நாடு வளர்ச்சியை  எட்டி இருக்கிறது.கடந்த மூன்று ஆண்டுகளில், 10 லட்சம் கோடிக்கும்  மேலாக,தனியார்  முதலீட்டுத் திட்டங்கள் வருவது  உறுதி செய்யப்பட்டிருக்கிறதுஎன்றால், அதற்கு காரணம், நம்முடைய ஆட்சியின் மீதான  நம்பிக்கை.வறுமை இல்லை. பட்டினிச் சாவு இல்லை. என்ற நிலையில் திறமையானவளமான -  உண்மையான நிர்வாகத்தை நாம் நடத்திக் கொண்டுவருகிறோம். சில தடைகள்  மட்டும் இல்லையென்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி  இன்னும் வேகமாக வளர்ந்திருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார், 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து