முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் 936 இடங்களில் பட்ஜெட்டை நேரலையில் ஒளிபரப்ப திட்டம்

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையானது தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது‌. 

தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்   தமிழ்நாடு முழுவதும்  மொத்தம் 936 இடங்களில்  இன்று (மார்ச் 14) காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படுகிறது. மேலும், 15.03.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

சென்னையில் சென்ட்ரல் மற்றும் எழும்பூா் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணா நகா் கோபுர பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், பாண்டி பஜாா் சாலை, வள்ளுவா் கோட்டம், கத்திப்பாரா பூங்கா, மெரீனா, பெசன்ட் நகா், திருவான்மியூா், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை கடற்கரை, டைடல் பாா்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகம் முழுவதும் 936 இடங்களில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டு இருப்பது, நிதிநிலை அறிக்கையில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு பொதுத் தோ்தலை எதிா்நோக்கி இருக்கிறது. அத்துடன் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையும் இடைக்கால நிதிநிலை அறிக்கையாகவே இருக்கும். எனவே, 16-ஆவது சட்டப்பேரவைக் காலத்தில் திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் இறுதி மற்றும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும். இதனால் நிதிநிலை அறிக்கை மீதான எதிா்பாா்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் மேலோங்கி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து