முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூலி உயர்வு கோரி வரும் 19-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட திருப்பூர் விசைத்தறி நெசவாளர்கள் முடிவு

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      தமிழகம்
Textile--2025-03-13

திருப்பூர், திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் செய்யும் விசைத்தறி நெசவாளர்கள் சங்கம், கூலி உயர்வு கோரி மார்ச் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும், வேலைவாய்ப்பு பெறுகின்றனா் . உதிரி பாகங்கள் விலை உயா்வு, மின் கட்டண உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு, ஆள்கள் பற்றாக்குறை, தொழிலாளா்கள் கூலி உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழிலில் லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், விசைத்தறியாளா்களுக்கு சரியான கூலி உயா்வு கிடைத்து 12 ஆண்டுகள் ஆகின்றன.

இதுகுறித்து கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா் சங்கத்தின் பொருளாளா் காரணம்பேட்டை எஸ்.இ. பூபதி கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதால் புதிய கூலி உயர்வு கோரி வருகிறோம். மின் கட்டணங்கள், கட்டட வாடகை, விசைத்தறி உதிரி பாகங்கள் மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் அனைத்தும் கடுமையாக உயர்ந்துள்ளன.

1991 முதல்  பேச்சுவார்த்தைகள் மூலம் விசைத்தறி கூலிகள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 2022 இல், இரு தரப்பினரும் 15 சதவிகித கூலி உயர்வை ஒப்புக்கொண்டனர், ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் அதை செயல்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சுமூகமாக தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் எஸ். பிரேமா கூறுகையில், கோவை, திருப்பூா் மாவட்டங்களில் செயல்படும் விசைத்தறிகளுக்கு 2014-ஆம் ஆண்டுக்குப் பின், உயா்த்தப்பட்ட கூலி சரிவர வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து